புதிய ஹேர் ஸ்டைலில் நடிகை சமந்தா.. செம டிரெண்டி லுக்.. வீடியோ இதோ
சமந்தா
முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா தற்போது பாலிவுட் பக்கம் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் சிட்டாடல் எனும் வெப் தொடர் வெளிவந்து ஓரளவு நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதைத் தொடர்ந்து தெலுங்கில் தயாரிப்பாளராக அறிமுகமான சமந்தா, சுபம் எனும் படத்தைத் தயாரித்தார். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படத்தில், கேமியோ ரோலில் சமந்தா நடித்திருந்தார்.
இதன்பின் ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் உருவாகும் Rakt Brahmand: The Bloody Kingdom எனும் புதிய வெப் தொடரில் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. மேலும் பங்காரம் எனும் படத்தை கைவசம் சமந்தா வைத்துள்ளார்.
ஒரு பக்கம் சினிமா குறித்து இந்த தகவல்கள் இருந்தாலும், மறுபக்கம் சமந்தா இயக்குநர் ராஜ் நிடிமுருவை காதலித்து வருவதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால், சமந்தா மற்றும் இயக்குநர் ராஜ் தரப்பில் இருந்து இதுவரை மறுப்பு தெரிவிக்கவில்லை.
மேலும் இருவரும் ஒன்றாக சுற்றித் திரியும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் பாலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. ஆனால், அது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய ஹேர் ஸ்டைல்
சமந்தா இன்று H&M ஈவெண்ட்டில் கலந்துகொண்டுள்ளனர். அதில் புதிய ஹேர் ஸ்டைல் மற்றும் டிரெண்டி லுக்கில் வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.
இதோ நீங்களே பாருங்க:
Samantha Ruth Prabhu at the H&M Event 🤍/2#Samantha #SamanthaRuthPrabhu pic.twitter.com/byQGfDDt5i
— WV - Media (@wvmediaa) September 25, 2025
Samantha Ruth Prabhu at the H&M Event 🤍#Samantha #SamanthaRuthPrabhu pic.twitter.com/fkkbffnghD
— WV - Media (@wvmediaa) September 25, 2025