திருமணத்திற்கு பிறகு வெளியான நடிகை சமந்தாவின் நியூ லுக் புகைப்படம்... குவியும் லைக்ஸ்
சமந்தா
சமந்தா, எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் சொந்த திறமையால் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி பெரிய இடத்தை பிடித்தவர்.
கடைசியாக சமந்தா தெலுங்கில் நடித்த குஷி திரைப்படம் வெளியானது, பின் Citadel Honey Bunny என்ற வெப் சீரிஸ் வெளியாகி இருந்தது. அதன்பின் சமந்தா நடிக்கும் படங்கள் குறித்து ஒரு தகவலும் இல்லை.
புதிய தயாரிப்பு நிறுவனம், போட்டோ ஷுட், சொந்த தொழில் கவனிப்பது என பிஸியாக உள்ளார்.

மறுமணம்
அதோடு கடந்த சில மாதங்களாக சமந்தா, ராஜ் நிடிமோரு என்பவரை காதலிக்கிறார் என செய்திகள் வந்துகொண்டிருந்த நிலையில் அண்மையில் இருவருக்கும் திருமணமும் நடந்து முடிந்தது.

சமந்தாவிற்கு ரசிகர்கள் மனதார வாழ்த்து கூறி வந்தனர். திருமணத்திற்கு பிறகு கழுத்தில் மஞ்சள் தாலியுடன் வலம்வந்த சமந்தாவின் போட்டோ வெளியாகி ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.
