அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த சமந்தா.. செம மாஸாக வெளிவந்த புதிய வெப் சீரிஸ் போஸ்டர்
நடிகை சமந்தா
கடந்த சில மாதங்களுக்கு முன் மயோசிட்டிஸ் எனும் அரியவகை நோயால் நடிகை சமந்தா பாதிக்கப்பட்டிருந்தார். அதற்கான சிகிச்சையில் இருந்து வந்த சமந்தா, அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தார்.

சமந்தா நடிப்பில் அடுத்ததாக சகுந்தலம் திரைப்படம் வெளிவரவிருக்கிறது. வருகிற பிப்ரவரி 17ம் தேதி வெளிவரவிருக்கும் இப்படத்தின் மீது ரசிகர்கள் அதீத எதிர்பார்ப்பை வைத்துள்ளனர்.
மீண்டு வந்த சமந்தா
நோயில் இருந்து மீண்டு வந்த சமந்தா இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பழைபடி புகைப்படங்களை வெளியிட துவங்கியுள்ளார். சமீபத்தில் கூட ஜிம்மில் கடின ஒர்கவுட் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
புதிய வெப் சீரிஸ்
இந்நிலையில், நடிகை சமந்தா கமிட்டாகியுள்ள Citadel எனும் புதிய வெப் சீரிஸின் First லுக் போஸ்டர் வெளிவந்துள்ளது. செம மாஸாக சமந்தா போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

ராஜ் மற்றும் டிகே இந்த வெப் சீரிஸை இயக்குகிறார்கள். இவர்கள் இருவரின் இயக்கத்தில் ஏற்கனவே தி பேமிலி மேன் 2 வெப் சீரிஸில் சமந்தா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெப் சீரிஸில் சமந்தாவுடன் இணைந்து பாலிவுட் நடிகர் வருண் தவானும் நடிக்கிறார்.
கணக்கு போட்ட கமல் ஹாசன்.. தவிடுபொடியாக்கிய விஜய்.. என்ன நடந்தது
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri