மீண்டும் இந்த இயக்குநருடன் இணையும் சமந்தா?.. வேற லெவல் கூட்டணி
சமந்தா
தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி இன்று உலகளவில் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார் நடிகை சமந்தா.
மாடலிங் துறையில் வெறும் ரூ. 500க்கு சம்பளமாக பெற தொடங்கி இப்போது பல கோடி சம்பளம் பெறும் நடிகையாகவும், பலருக்கு லட்சக்கணக்கில் சம்பளம் கொடுக்கும் முதலாளியாகவும் உயர்ந்துள்ளார்.
நடிப்பு, தொழில் என பிஸியாக வலம் வந்தவருக்கு பெரிய தடையாக அமைந்தது மயோசிடிஸ் என்ற நோய் பாதிப்பு. தற்போது கொஞ்சம் அந்த பாதிப்பில் இருந்து மீண்டுள்ளார்.
நடிப்பில் தற்போது கவனம் செலுத்தி வரும் சமந்தா நடிப்பில் கடந்த ஆண்டு சிட்டாடல் வெப் தொடர் வெளிவந்த ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது.
வேற லெவல் கூட்டணி
இந்நிலையில், தெலுங்கு இயக்குநரும், திரைக்கதை எழுத்தாளருமான நந்தினி ரெட்டி நேற்று தனது 46-வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
அப்போது வாழ்த்து தெரிவித்த சமந்தாவுக்கு 'உங்களுடன் மீண்டும் ஒரு புதிய படத்தை தொடங்குவதற்காக காத்திருக்கிறேன்' என்று பதிலளித்துள்ளார்.
சமந்தா இவர் இயக்கத்தில் 'ஓ பேபி' படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சமந்தா மீண்டும் நந்தினி இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பாக்கப்படுகிறது.