ஐந்து மொழிகளில் சமந்தா நடிக்கும் பிரமாண்ட திரைப்படம்! பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ..
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை சமந்தா.
இவர் நடிப்பில் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் திரில்லர் கதைக்களத்தில் இரு திரைப்படங்கள் உருவாகி வருகிறது.
மேலும், அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடமாடவுள்ளார். இதற்காக நடிகை சமந்தாவிற்கு ரூ. 1.5 கோடி சம்பளம் வாங்கியுள்ளார்.
கோலிவுட், பாலிவுட் எல்லாம் தாண்டி, நடிகை சமந்தா தற்போது ஹாலிவுட் திரையுலகிலும் தனது காலடியை பதிக்கவுள்ளார். அதன் அறிவிப்பும் சமீபத்தில் வெளியானது அதற்கு அனைவரும் வாழ்த்துக்களை குவித்து வந்தனர்.
இந்நிலையில் தற்போது ஐந்து மொழிகளில் சமந்தா நடிக்கும் பான் இந்தியன் படத்தின் டைட்டில் லுக் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தின் பெயர் 'யசோதா' எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.