மீண்டும் தமிழ் படத்தில் நடிகை சமந்தா.. யார் இயக்கத்தில் தெரியுமா? வேற லெவல் தான்
சமந்தா
தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி இன்று உலகளவில் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார் நடிகை சமந்தா. சினிமாவில் கடின உழைப்பை போட்டு முன்னேறி வந்த சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்தார்.
தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியவர் நடிப்பில் கடந்த ஆண்டு சிட்டாடல் வெப் தொடர் வெளிவந்த ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது.
இதை தொடர்ந்து ரக்ட் பிரம்மாண்டம் என்ற வெப் தொடரில் நடிக்க உள்ளார். இந்த வெப் தொடரை ராஜ் மற்றும் டிகே இணைந்து இயக்குகிறார்கள். மேலும் சமந்தாவே தயாரித்து கதாநாயகியாக நடிக்கும் பங்காராம் திரைப்படமும் விரைவில் துவங்கவுள்ளது.
யார் தெரியுமா?
இந்நிலையில், சமந்தா அடுத்து அட்லீ இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இப்படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தில் சமந்தா நடிக்க உள்ளாராம்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பாக்கப்படுகிறது.

சிறிய தீவில் 2 சடலங்களும் 39 புலம்பெயர் மக்களும்... கண்டுபிடித்த கிரேக்க கடலோர காவல்படை News Lankasri
