நாக சைதன்யாவுக்கு முன்பே இன்னொரு நடிகரை காதலித்த சமந்தா! ஏன் பிரேக்அப் ஆனது? சாவித்ரி வாழ்க்கையுடன் ஒப்பிட்ட நடிகை
சமந்தா
நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் ye maaya chesave என்ற படத்தின் ஷூட்டிங்கில் ஒன்றாக கலந்துகொண்டபோது தான் காதலில் விழுந்து அதன் பின் பல வருடம் உருகி உருகி காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
அவர்கள் கடந்த வருடம் திடீரென விவகாரத்தை அறிவித்து சினிமா உலகத்திற்கு கடும் அதிர்ச்சி கொடுத்தனர். அவர்கள் இடையே என்ன தான் பிரச்சனை என தற்போது வரை அவர்கள் வெளிப்படையாக அறிவிக்கவே இல்லை.

சமந்தாவின் முந்தைய காதல்
சமந்தா மகாநடி ரிலீஸ் நேரத்தில் ஒரு பேட்டியில் நாக சைதன்யா கணவராக வந்தது அதிர்ஷ்டம் என கூறி இருந்தார். மேலும் அதற்கு முன்பு ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருந்தது பற்றி சமந்தா பேசி இருக்கிறார்.
"நடிகை சாவித்ரி போல நானும் பிரச்சனைகள் சந்தித்திருப்பேன். ஆனால் நான் அதை உணர்ந்து அதில் இருந்து வெளியில் வந்துவிட்டேன். அந்த காதல் நல்ல வகையில் முடியவில்லை.ஆனால் எனக்கு நாக சைதன்யா போன்ற ஒரு கணவர் கிடைத்தது எனக்கு அதிர்ஷ்டம்" என சமந்தா கூறி இருக்கிறார்.

140 - 145 வேகத்தில் பந்துவீசக்கூடியவர் எங்களிடம் இல்லை: தோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri
கரூரில் திரைக்கவர்ச்சிக்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுவேலையா? சீமான் எதிர்ப்பு IBC Tamilnadu
ஜேர்மனி உருவாக்கிவரும் புதிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு- அமெரிக்காவின் Patriot-க்கு மாற்று News Lankasri