நான் அவர்களை பழிவாங்குகிறேனா, எனது வாழ்க்கை.. முன்னாள் கணவர் குறித்து சமந்தா
சமந்தா
நடிகை சமந்தா, தமிழ் பொண்ணு என ரசிகர்களால் செல்லமாக கொண்டாடப்படும் பிரபலம்.
இவருக்கு தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவுடன் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்கள் சந்தோஷப்பட்டதை தாண்டி சமந்தா ரசிகர்கள் பெரிய அளவில் சந்தோஷப்பட்டார்கள்.
ஆனால் சமந்தாவின் திருமண வாழ்க்கை சரியாக அமையாததால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தார்கள்.
விவாகரத்திற்கு பிறகு மயோசிடிஸ் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட சமந்தா இப்போது நோயின் தாக்கத்தில் இருந்து கொஞ்சம் வெளியே வந்துள்ளார்.
முன்னாள் கணவர்
சமந்தா பேட்டி பிஸியாக நடிக்கும் சமந்தா அண்மையில் ஒரு பேட்டியில் தனது விவாகரத்து குறித்து முதன்முறையாக பேட்டி கொடுத்துள்ளார்.
அதில் அவர், எனக்கு விவாகரத்து ஆன சமயத்தில் பலரும் என்னை செகண்ட் ஹேண்ட், வாழ்க்கை வீணாக போய்விட்டது, சமந்தாவை யூஸ் செய்துவிட்டார்கள் என்றெல்லாம் சொன்னார்கள்.
அப்போது ரொம்ப கஷ்டமாக இருந்தது, இந்த பிரச்சனை என்பது எனக்கு மட்டுமில்லாமல் எனது குடும்பத்திற்கும் கஷ்டமாக இருந்தது. அப்போது கொஞ்சம் டவுனாகத்தான் இருந்தேன், அதற்காக மூலையில் அமர்ந்து அழுதுகொண்டா இருக்க முடியும்.
வாழ்க்கையில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அதையும் நான் பழிவாங்குவதற்காக வாழ்ந்துகொண்டிருப்பதாக சிலர் நினைக்கிறார்கள். ஆனால் அது அர்த்தம் இல்லை.
நான் எனது வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறேன் என பேசியுள்ளார்.

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
