திடீரென அப்படி ஒரு முடிவெடுத்த சமந்தா.. என்ன காரணம்? குழப்பத்தில் ரசிகர்கள்
சமந்தா சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். எப்போதும் இன்ஸ்டாகிராமில் அவர் போட்டோஷூட் ஸ்டில்கள், படத்தின் ஸ்டில்கள், ஒர்கவுட் வீடியோக்கள் என பல விஷயங்களை பதிவிட்டு வருகிறார்.
அவர் அதிகம் ஆக்டிவாக இருப்பதாலேயே இன்ஸ்டாவில் 24 மில்லியன் ரசிகர்கள் பின்தொடர்கிறார்கள்.
இந்நிலையில் சமந்தா தற்போது திடீரென சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை நிறுத்தி இருக்கிறார்.

நாக சைதன்யா ஒரு நடிகையை காதலிக்கிறார் என செய்தி பரவியபோது, அந்த வதந்தியை கிளைப்பி விட்டதே சமந்தாவாக இருக்கலாம் என மீடியாவில் செய்தி வர சமந்தா கடும் கோபமாக பதிலடி கொடுத்தார்.
அதற்கு பிறகு தற்போது திடீரென இப்படி ஒரு முடிவு எடுத்திருப்பது சமந்தா ரசிகர்களை ஷாக் ஆக்கி இருக்கிறது. ஏன் இப்படி மாறினார் என குழப்பத்தில் இருக்கின்றனர்.