சமந்தா குடும்பத்தில் புதிதாக இணைந்த நபர்! குவியும் வாழ்த்துக்கள்...
சமந்தா தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து அனைவரிடமும் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும் சமந்தா தற்போது 'காத்துவாக்குல ரெண்டு காதல்', தெலுங்கில் 'ஷகுந்தலம்' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பையும் அவர் முடித்துக் கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது.
சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்வாக இருந்து வரும் நடிகை சமந்தா அவ்வப்போது தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். சமீபத்தில் கூட ஹேண்ட் பேக் விளம்பரத்திற்காக அவர் பதிவிட்டிருந்த புகைப்படங்கள் செம வைரலானது.
இந்நிலையில் நடிகை சமந்தாவின் வீட்டில் புதிதாக குட்டி நபர் ஒருவர் இணைந்துள்ளார். ஆம், சமந்தா தற்போது சாஷா என்ற Pitbull வகை குட்டி நாய் ஒன்றை வளர்த்து வருகிறார்.
இன்ஸ்டாகிராம் இது குறித்த செய்தியை மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார் நடிகை சமந்தா, இதோ அவரின் பதிவு.