குழந்தை பெற்றுக்கொள்ள நடிகை சமந்தா இப்படியொரு பிளான் எல்லாம் செய்தாரா?- அதற்குள் விவாகரத்தா?
கடந்த அக்டோபர் 2ம் தேதி சினிமா ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி வெளியானது. பிரபலங்களில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட ஜோடி சமந்தா-நாக சைத்தன்யா.
இருவரும் திருமணம் செய்தபோது எவ்வளவு ரசிகர்கள் சந்தோஷப்பட்டார்களோ அதை விட அவர்கள் பிரிந்தபோது வருத்தத்தில் உள்ளார்கள்.
பிரிந்துவிட்டோம் என்று அவர்கள் அறிவித்ததில் இருந்து அதற்கான காரணம் என நிறைய செய்திகள் வருகின்றன.
ஆனால் தற்போது பிரபலம் நடிகை சமந்தா பற்றி பேசியுள்ளார். சமந்தா நடித்துவரும் சகுந்தலம் பட தயாரிப்பாளர் நீலிமா குணா பேசுகையில், எனது தந்தை சகுந்தலம் படத்திற்காக சமந்தாவை அணுகியபோது சமந்தா கதை மிகவும் பிடித்துபோக நடிப்பதாக கூறினார்.
பின்னர் ஜுலை அல்லது ஆகஸ்ட் மாதத்திற்குள் தனது காட்சிகளை முடிந்துவிடுங்கள் என கேட்டுக்கொண்டார். நாக சைத்தன்யாவுடன் வாழ்க்கை தொடங்க, குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்திருந்தார் என கூறியுள்ளார்.
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
சர்ச்சைகளுக்கு மத்தியிலும் கெத்து காட்டும் த்ரிஷா! மே குறித்து என்ன சொல்லியுள்ளார் தெரியுமா? Manithan