இன்று தனது திருமண நாளில் நடிகை சமந்தா போட்ட புகைப்படம்- கடந்த வருடம் என்ன பதிவு செய்தார் தெரியுமா?

marriage samantha divorce nagachaitanya
By Yathrika Oct 07, 2021 07:15 AM GMT
Report
140 Shares

சினிமா ரசிகர்களால் மிகவும் பிரபலமாக கொண்டாடப்பட்ட ஜோடிகளில் சமந்தா-நாக சைத்தன்யா இருக்கிறார்கள். படத்தில் ஒன்றாக நடித்து நண்பர்களாக இருந்து பின் காதலர்களாகி பின் திருமணமும் செய்துகொண்டார்கள்.

இருவரும் வெளியிடும் புகைப்படங்கள் எப்போதுமே சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகிவிடும். சந்தோஷமாக இருந்த இந்த ஜோடி பிரிவதாக கடந்த அக்டோபர் 2ம் தேதி அறிவித்தார்கள்.

இது அவர்களது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. இன்று சமந்தா-நாக சைத்தன்யா ஜோடியின் 4வது திருமண நாள், அவர்கள் ஒன்றாக இல்லை.

இந்த நிலையில் நடிகை சமந்தா இன்று புகைப்படத்துடன் ஒரு பதிவை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். அதில் அவர், தொலைந்து காணப்பட்ட படங்களின் பாடல்கள். பள்ளத்தாக்கில் மனச்சோர்வு எதிரொலி மற்றும் பழைய காதலர்களின் பாடல்கள். பழைய பங்களாக்கள், படிக்கட்டுகள் மற்றும் சந்துகளில் காற்றின் ஒலி என்று பதிவு செய்துள்ளார்.

கடந்த வருடம் இதே நாளில் சமந்தா,  நீ எனக்கானவன் நான் உனக்கானவள், எந்த கதவு வந்தாலும் அதை நாம் ஒன்றாக திறப்போம் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் கனவா என்று பதிவிட்டு இருந்தார்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US