சமந்தாவுக்கு என்ன தான் ஆச்சு? அவரது சோகமான பதிவு
சமந்தா
சமந்தாவுக்கு தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகள் தான் வரிசைகட்டி வந்து கொண்டிருக்கிறது. நாகசைதன்யாவை விவாகரத்து செய்த பிறகு அவருக்கு திடீரென மயோசிட்டிஸ் என்ற நோய் பாதிப்பு ஏற்பட்டு படுத்த படுக்கையானார். அதற்காக சிகிச்சை பெற்று தற்போது அதில் இருந்து ஓரளவு மீண்டு வந்துவிட்டார்.
"சமந்தாவின் கெரியர் முடிந்துவிட்டது, அவர் பேட்டிகளில் கண்ணீர் விட்டு படத்தை ஓட வைக்க முயற்சிக்கிறார்" என ஒரு தெலுங்கு தயாரிப்பாளர் சொன்னது பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு சமந்தா பதிலடி கொடுக்கப்போய் அது பெரிய பிரச்னையானது.
இந்த நிலையில் சமந்தா நடிப்பில் சமீபத்தில் வந்த சாகுந்தலம் படம் படுதோல்வியை சந்தித்து உள்ளது. அந்த படத்தை சத்தமே இல்லாமல் அமேசான் நிறுவனம் ஓடிடியில் வெளியிட்டு இருக்கிறது. ஒரு முன்னறிவிப்பு கூட விடாமல் சமந்தாவை அசிங்கப்படுத்துறீங்களே என ரசிகர்கள் புலம்பினார்கள்.

தனிமையிலே இனிமை
இந்நிலையில் சமந்தா இன்ஸ்டாகிராமில் தான் தனிமையில் இருப்பதை பற்றி ஒரு பதிவை போட்டிருக்கிறார்.
குஷி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த போட்டோவை வெளியிட்டு அவர் தனிமை பற்றி பேசி இருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள் சமந்தாவுக்கு என்ன ஆச்சு என கேட்டு வருகிறார்கள்.
