நாக சைதன்யா இரண்டாம் திருமணம்.. சமந்தா அதிரடியாக போட்ட ஒரு பதிவு
நடிகை சமந்தா பல வருடமாக காதலித்து தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் நான்கே வருடங்களில் அவர்கள் பிரிவதாக அறிவித்து எல்லோருக்கும் ஷாக் கொடுத்தனர்.
சட்டப்படி விவாகரத்து பெற்ற நிலையில் தற்போது நாக சைதன்யா தனது புது காதலி சோபிதாவை இரண்டாம் திருமணம் செய்கிறார். இன்று திருமண நிகழ்ச்சி ஐதராபாத்தில் தொடங்கி இருக்கிறது.
சமந்தா போட்ட பதிவு
இந்நிலையில் இன்று சமந்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவை போட்டிருக்கிறார். ஒரு பெண் மற்றும் ஆண் இருவரும் wrestling சண்டை போடுவது போலவும் இருக்கிறது அந்த வீடியோ.
ஆரம்பத்தில் கைகொடுக்கும்போதே பெண்ணை காயப்படுத்திய அந்த பையன், அதன் பிறகு சிறப்பாகவும் wrestling செய்கிறான். ஆனால் இறுதியில் பெண் தான் ஜெயிக்கிறார். அந்த பையன் கதறி கதறி அழுகிறான்.
அந்த வீடியோவை பதிவிட்டு '#FightLikeAGirl' என சமந்தா குறிப்பிட்டு இருக்கிறார்.
நாக சைதன்யா திருமணம் செய்யும் நாளில் சமந்தா போட்ட பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.


பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
