விவாகரத்துக்கு பின் முதல் முறையாக நாக சைதன்யா போட்டோவை பதிவிட்ட சமந்தா
நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் சினிமாவில் ஜோடியாக நடிக்கும்போது காதலில் விழுந்து அதன் பின் திருமணம் செய்துகொண்டனர். ஆனால் அவர்கள் திடீரென சென்ற வருடம் விவாகரத்தை அறிவித்தனர்.
விவாகரத்து
சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவருக்கும் நடுவில் ஏற்கனவே பிரச்சனை இருப்பதாக அதற்கு முன்பே கூறப்பட்டு வந்த நிலையில் தான் திடீரென அவர்கள் விவகாரத்தை அறிவித்தனர்.
சமந்தா நாக சைதன்யாவை விட்டு முற்றிலுமாக விலகி இருக்க முடிவெடுத்து அவரை இன்ஸ்டகிராமில் கூட unfollow செய்துவிட்டார்.
சமந்தா இன்ஸ்டா போட்டோ
இந்நிலையை சமந்தா விவாகரத்துக்கு பின் முதல்முறையாக நாக சைதன்யாவின் போட்டோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். மஜிலி படம் வெளியாகி மூன்று வருடங்கள் ஆகும் நிலையில் அதற்காக தான் அந்த பதிவை அவர் போட்டிருக்கிறார்.
சமந்தா இப்படி செய்து இருப்பது ரசிகர்களுக்கே ஆச்சர்யம் அளித்து இருக்கிறது.
