2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தமிழில் ரீ என்ட்ரி கொடுக்கும் சமந்தா?.. வேற லெவல்
சமந்தா
பல்லாவரத்து பெண் என தமிழ் சினிமா ரசிகர்களால் பெருமையாக கொண்டாடப்படுபவர் நடிகை சமந்தா.
மாடலிங் துறையில் வெறும் ரூ. 500க்கு சம்பளமாக பெற தொடங்கி இப்போது பல கோடி சம்பளம் பெறும் நடிகையாகவும் பலருக்கு லட்சக்கணக்கில் சம்பளம் கொடுக்கும் முதலாளியாக உயர்ந்துள்ளார் நடிகை சமந்தா.
நடிப்பு, தொழில் என பிஸியாக வலம் வந்தவருக்கு பெரிய தடையாக அமைந்தது மயோசிடிஸ் என்ற நோய் பாதிப்பு. நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டவர் இப்போது தான் கொஞ்சம் அதில் இருந்து மீண்டுள்ளார்.
தமிழில் ரீ என்ட்ரி
இதனால் சினிமாவில் இருந்து விலகி இருந்த சமந்தா தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில், சமீபத்தில் இவர் நடிப்பில் சிடாடல் என்ற வெப் தொடர் வெளியாகி இருந்தது.
அதை தொடர்ந்து, தெலுங்கு மற்றும் தமிழில் ரீ என்ட்ரி கொடுக்க முடிவு செய்து அதற்கான ஸ்கிரிப்ட்களை கேட்டு வருகிறாராம். ஒரு நல்ல லவ் ஸ்டோரி கதைகளை செலக்ட் செய்கிறாராம். இதனால், இவர் 2 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
