நாக சைதன்யா இரண்டாம் திருமணம்.. எனக்கு பொறாமையா? சமந்தா அதிரடியாக சொன்ன பதில்
நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்ட நிலையில் சில வருடங்களில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.
அதன் பின் நாக சைதன்யா கடந்த வருடம் தனது புது காதலி சோபிதாவை திருமணம் செய்துகொண்டார். மறுபுறம் சமந்தா சிங்கிளாக தான் இருக்கிறார். அவர் மயோசிட்டிஸ் என்ற நோய் பாதிப்பில் இருந்து மீள சிகிச்சையை தொடர்ந்து வருகிறார்.
பொறாமை எல்லாம் இல்லை
நாக சைதன்யா அடுத்த திருமணம் செய்துகொண்டது பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் சமந்தாவிடம் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அதை பார்த்து பொறாமையாக இருக்கிறதா என்றும் கேட்டிருக்கிறார்கள்.
"அய்யய்யோ இல்லை. நான் எப்போதும் விலகி இருக்கும் ஒரு விஷயம் என்றால் அது பொறாமை தான். என்னிடம் அது இருப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். பொறாமை தான் எல்லா மோசமான விஷயங்களுக்கும் வேர். மற்ற எல்லாம் பரவாயில்லை, ஆனால் பொறாமை என்பதற்கு மட்டும் என்னிடம் இடமில்லை" என சமந்தா கூறி இருக்கிறார்.
விமர்சனங்களுக்கு பதிலடி
"ஒரு பெண் திருமணமாகி குழந்தைகள் பெற்று இருந்தால் தான் முழுமையானதாக சமூகத்தில் பார்கிறார்கள். என் வயதில் இருப்பவர்கள் அதை செய்திருக்கவிலை என்றால் நான் சோகமான மற்றும் தனிமையான வாழ்க்கையை வாழ்வதாக எல்லோரும் நினைக்கிறார்கள்."
"அது தவறு. உண்மையும் இல்லை. ஒரு பெண் என்பவருக்கு விதிக்கப்படும் தரநிலைகளை அவள் பூர்த்தி செய்யவில்லை என்றாலும் அவள் மகிழ்ச்சியாகவும் செழிப்பாகவும் இருக்கிறாள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்."
இவ்வாறு தன் மீது வரும் விமர்சனங்களுக்கு சமந்தா பதிலடி கொடுத்து இருக்கிறார்.

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

விமானத்தில் ஒலித்த திடீர் தீ எச்சரிக்கை அலாரம்: பீதியில் இறக்கையில் இருந்து குதித்த பயணிகள் News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
