கடைசியில் நாயுடன் தான் சாகப்போகிறார் சமந்தா- ரசிகரின் கமெண்டிற்கு நடிகை பதிலடி
சமந்தா தென்னிந்திய சினிமா ரசிகர்கள் பெருமையாக கொண்டாடும் ஒரு முன்னணி நடிகை. இவர் சினிமாவிற்குள் நுழைந்த உடனே பெரிய இடத்தை பிடித்துவிடவில்லை, கொஞ்சம் கொஞ்சமாக தனது கடின உழைப்பின் மூலம் மேலே வந்துள்ளார்.
அடுத்தடுத்து சினிமா வாய்ப்பு, விளம்பரங்கள், போட்டோ ஷுட், ஒர்க்-அவுட் செய்வது என தன்னை எப்போதும் பிஸியாகவே வைத்துள்ளார்.
அவரை பார்த்து தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என நினைக்கும் பெண்களும் உண்டு.
புதிய படங்கள்
சமந்தா நடிப்பில் ஷகுந்தலம், யசோதா, குஷி என தொடர்ந்து படங்கள் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் குஷி பட படப்பிடிப்பில் சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டாவிற்கு விபத்து ஏற்பட்டதாகவும் உடனே படக்குழு அவர்களை மீட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த நேரத்தில் தான் சமந்தாவை குறித்து ஒரு ரசிகர் மோசமாக போட்ட கமெண்ட் வைரலாகி வருகிறது.
நடிகை எப்போது தனது செல்ல நாய்களுடன் புகைப்படங்கள் வெளியிடுவது வழக்கம். அப்படி சமீபத்தில் ஒரு புகைப்படம் வெளியிட அதைப்பார்த்த ஒரு ரசிகர், கடைசியில் அவர் நாய் மற்றும் பூனைகளுடன் தான் சாகப்போகிறார் என பதிவு செய்துள்ளார்.
அதைப்பார்த்த சமந்தா அப்படி நடந்தால் சந்தோஷம் தான் என பதில் கொடுக்க அந்த டுவிட் வைரலாகி வருகிறது.
I would consider myself lucky ☺️ https://t.co/QH5XEtfALK
— Samantha (@Samanthaprabhu2) May 27, 2022
வரலாற்றில் படு மோசமான நஷ்டத்தை சந்தித்துள்ள நடிகை கங்கனா படங்கள்- ஒரு சதவீதம் கூட இல்லையே