நடிகை சமந்தா வாங்கிய புதிய வீட்டின் புகைப்படங்கள்.. இதோ பாருங்க
சமந்தா
முன்னணி நடிகையாக இந்திய சினிமாவில் வலம் வருகிறார் சமந்தா. கடந்த சில ஆண்டுகளாக மிகப்பெரிய அளவில் ஹிட் படம் கொடுக்கவில்லை என்றாலும், தன்னுடைய மார்க்கெட்டை இழக்காமல் இருக்கிறார்.
படங்களை விட வெப் தொடர்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த சிட்டாடல் வெப் தொடர் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து Rakt Brahmand: The Bloody Kingdom எனும் வெப் தொடரில் நடிக்கவுள்ளார். இந்த வெப் தொடரை இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே இயக்கவுள்ளனர்.
காதல் கிசுகிசு
நடிகை சமந்தா இயக்குநர் ராஜ் நிடிமோருவை காதலித்து வருவதாக பாலிவுட் திரை வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள போவதாகவும் கூறுகின்றனர். ஆனால், சமந்தா மற்றும் இயக்குநர் ராஜ் தரப்பில் இருந்து எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய வீடு
முன்னணி நடிகை சமந்தா பாலிவுட்டில் அதிகம் கவனம் செலுத்தி வருகிற காரணத்தால் மும்பையில் தங்கி வருகிறார். இந்த நிலையில், மும்பையில் புதிதாக வீடு ஒன்றை சமந்தா வாங்கியுள்ளார். அதை அவரே தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், மும்பையில்தான் வாங்கியிருக்கும் புதிய வீட்டின் சில புகைப்படங்களை சமந்தா வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்..


