சகுந்தலம் படத்தில் நடித்ததற்காக நடிகை சமந்தா இத்தனை கோடி சம்பளம் பெற்றாரா?
சகுந்தலம்
நடிகை சமந்தா டைட்டில் கேரக்டரில் மிகவும் வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் தான் சகுந்தலம்.
மகாபாரதத்தில் வரும் சகுந்தலா, துஸ்யந்துலா காதல் கதையை மையமாக வைத்து சகுந்தலம் படத்தை இயக்கியுள்ளார் குணசேகர்.
இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி மக்களின் எதிர்ப்பார்ப்பை தூண்டியுள்ளது. வரும் ஏப்ரல் 14ம் தேதி படம் ரிலீஸ் ஆக இருக்கிறது, இன்னொரு பக்கம் சமந்தா படத்திற்கான புரொமோஷன் வேலைகளையும் செய்து வருகிறார்.

நடிகையின் சம்பளம்
மிகவும் வெயிட்டான இந்த ரோலில் நடிக்க நடிகை சமந்தா ரூ. 7 கோடி வரை சம்பளம் பெற்றதாக ஒருபக்கம் கூறுகின்றனர்.
150 நாட்கள் இப்படத்திற்காக தேதி ஒதுக்கி நடித்ததில் சமந்தா ரூ. 3 கோடி வரை சம்பளம் பெற்றார் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் சரியான சம்பள விவரம் தெரியவில்லை.