நடிகையின் வாழ்க்கை நீண்டது அல்ல.. நடிகை சமந்தா வெளிப்படையான பேச்சு
சமந்தா
இந்திய அளவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா கடைசியாக சிட்டாடல் வெப் தொடரில் நடித்திருந்தார். இந்த வெப் தொடர் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது.
இதை தொடர்ந்து சுபம் எனும் தெலுங்கு படத்தை சமந்தா தயாரித்து அதில் கேமியோ ரோலிலும் நடித்திருந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக சமந்தா நடித்து எந்த ஒரு படமும் வெளிவரவில்லை. ஆனாலும் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு இருக்கும் கிரேஸ் கொஞ்சம் கூட குறையவில்லை. அடுத்ததாக இயக்குநர் ராஜ் மற்றும் டிகே இயக்கி வரும் வெப் தொடர் ஒன்றில் சமந்தா நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை சமந்தா இயக்குநர் ராஜ் நிடிமூரு என்பவரை காதலித்து வருவதாக கிசுகிசுகப்படுகிறது. இருவரும் நெருக்கமாக எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளிவந்து வைரலாகி வரும் நிலையில், தொடர்ந்து இருவர் குறித்தும் செய்திகள் உலா வருகின்றன. ஆனால், இதற்கு சமந்தா தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கவில்லை.
வெளிப்படையான பேச்சு
”நடிகை வாழ்க்கை நீண்டது அல்ல, புகழ், ரசிகர்கள் பட்டாளம் போன்றவை சிறிது காலம் மட்டுமே. ஒரு நடிகையாக உயரும் போது அதற்கு பின்னால் நிறைய அதிர்ஷ்டமும் அருளும் உள்ளது. எனது வாழ்க்கையில் நடிகையாக இருப்பதை விட, பெரிய தாக்கத்தை எற்படுத்த விரும்பினேன். அதை உணர்ந்துகொள்வது எனக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது” என சமந்தா கூறியுள்ளார்.