அவர்களை நான் ப்ளாக் செய்துவிடுவேன்.. நடிகை சமந்தா ஓபன் டாக்
சமந்தா
முன்னணி நடிகை சமந்தாவை பற்றி தெரியாதவர்கள் இந்திய சினிமாவிலேயே இல்லை. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் மட்டுமே தொடர்ந்து நடித்து வந்த இவர், தற்போது பாலிவுட் பக்கம் அதிக கவனம் செலுத்தி அங்கு தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார்.

நடிகை சமந்தா கடந்த ஆண்டு ராஜ் நிடிமுரு என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் சமந்தா நடிப்பில் உருவாகி வரும் படம் மா ஏண்ட்டி பங்காரம். ப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சமந்தா ஓபன் டாக்
சமந்தா பேசும் விஷயங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் சமீபத்தில் இவர் கூறியுள்ள விஷயம் ஒன்று பேசுபொருளாகியுள்ளது. இதில் "நான் பள்ளி படிக்கும் காலத்தில் டைம் டேபிள் போட்டு அதன்படி படிப்பேன். எதிலும் கவனச்சிதறல் ஏற்படாது. தற்போது அப்படி இருக்க முடியுமா என தெரியவில்லை.

ரீல்ஸ் பார்ப்பதால் வரும் Fear Of Missing Out (FOMO Effect) பயம் மோசமானது. அதனால் நான் என் இன்ஸ்டாகிராமை லாக் செய்துவிடுவேன். வேண்டுமென்றே போரிங்கான மற்ற விஷயங்களை செய்வேன். என்னை பற்றி நெகட்டிவ்வாக பேசுபவர்களை நான் உடனே பிளாக் செய்தும் விடுவேன்" என கூறியுள்ளார்.
