நடிப்பை தாண்டி ரூ. 120 கோடி வருவாய் ஈட்டிய சமந்தா.. அடேங்கப்பா
Samantha Ruth Prabhu revenue 120 crore: நடிகை சமந்தா தனது Secret Alchemist தொழில் நிறுவனம் மூலம் ரூ. 120 கோடி வருமானம் ஈட்டி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை சமந்தா
திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா தற்போது கர்ப்பமாக இருப்பதால் படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருக்கிறார். ஆனால், செலிபிரிட்டி மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் நடுவராக உள்ளார். அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் தனது கர்ப்பகால அனுபவம் குறித்த வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

ரூ. 120 கோடி வருவாய்
நடிகை சமந்தா நடிப்பை தாண்டி Saaki, Tralala Moving Pictures போன்ற நிறுவனங்களை நடத்தி தொழிலதிபராகவும் வலம் வருகிறார். இதில் Secret Alchemist எனும் வாசனை திரவிய நிறுவனத்தில் இவர் இணை நிறுவனராக உள்ளார்.

அழகு மற்றும் நறுமண பொருட்களில் உள்ள ரசாயனங்கள் குறித்து அறிந்த சமந்தா 2 ஆண்டுகள் அவற்றை பயன்படுத்துவதை தவிர்த்து, இயற்கையான நறுமண பொருட்களை உருவாக்கும் நோக்கில் அங்கிதா ததானி மற்றும் ஆகாஷ் வாலியா ஆகியோருடன் இணைந்து இந்த நிறுவனத்தை தொடங்கினார்.

இந்த நிலையில், இந்த நிறுவனம் தொடங்கிய 8 மாதங்களிலேயே ரூ. 120 கோடி வருவாய் ஈட்டியுள்ளாராம் நடிகை சமந்தா. சினிமாவை தாண்டி தொழிலதிபராகவும் சமந்தா படைத்துள்ள இந்த சாதனை மிகப்பெரிய விஷயம் என சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
November 2026 Tarot Predictions: நவம்பர் மாதம் உங்களுக்கு என்ன மாற்றங்களை கொண்டுவரப்போகின்றது? Manithan
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
நெதன்யாகுவின் அழுத்தம்... அணு ஆயுதத் தாக்குதலுக்கும் ட்ரம்ப் தயாராகலாம்: அம்பலப்படுத்தும் கார்ல்சன் News Lankasri