ரோஜாதான் மணப்பெண்ணா? கடைசி நிமிடத்தில் ஷாக் கொடுத்த அரசி.. உடைந்த சாமந்தியின் ரகசியம்!
சாமந்தி
இரவு 8 மணிக்கு Zee தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் சாமந்தி. இன்று ரசிகர்களுக்கு செம ட்விஸ்ட் மற்றும் அதிரடி தருணங்களுடன் வர இருக்கிறது. நேற்றைய எபிசோடில் கேக்கில் விஷம் கலந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று அரசியின் ஒரு அறிவிப்பு அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுக்கிறது! விஷம் கலந்த கேக் விவகாரம் தெரிய வந்ததும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், உடனடியாக வேறொரு கேக் கொண்டு வரப்பட்டு பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்கிறது.
இந்த சூழலில், "அம்மா நம்மள ஏதாவது செய்துவிடுவார்களோ?" என்ற பயத்தில் ரோஜா தனியாக சென்று நிற்கிறாள். அவளின் பதற்றத்தை கவனிக்கும் ஆதவ் என்ன நடந்தது என்று கேட்க, ரோஜா திறமையாக நிலைமையை சமாளித்து விடுகிறாள். இதையடுத்து, குடும்பத்தினரை ஒன்றாக கூட்டும் அரசி, ஆதவ்வின் திருமணம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார். மணப்பெண் யார் என்பதை சொல்லப் போகிறேன் என கூறி அனைவரின் எதிர்பார்ப்பையும் உச்சத்திற்கு கொண்டு செல்கிறார். அப்போது திடீரென ரோஜாவின் கையை பிடித்து உயர்த்தி "இவர்தான் மணப்பெண்" என கூற, ரோஜா மகிழ்ச்சியும் அதிர்ச்சியும் கலந்த உணர்வில் உறைந்து போகிறாள். ஆனால் அடுத்த நொடியில் அனைவரையும் ஷாக் அடைய வைக்கும் வகையில், அரசி வேறொரு பெண்ணை ஆதவ்வின் மணப்பெண்ணாக அறிவிக்கிறார்.
அதிரடி
அதன் பிறகு குடும்பத்தினர் அனைவரும் இணைந்து குரூப் போட்டோ எடுக்கிறார்கள். வேலைக்காரர்களையும் போட்டோவுக்கு அழைக்க முயற்சி செய்யப்படும்போது, அதற்கு அரசி கோபம் அடைவது புதிய சலசலப்பை ஏற்படுத்துகிறது. மறுபுறம், காட்டு ராஜா பரிசாக கொடுத்த நெக்லஸை அணிந்து கண்ணாடி முன் ரசிக்கும் அரசி, அர்ஜுன் கொடுத்த பொம்மையையும் பார்த்து வியக்கிறாள். அந்த பொம்மையில் இருந்த நுணுக்கமான விவரங்களை கண்டு ஆச்சரியப்படும் அரசி, அர்ஜுனை நேரில் சந்தித்து, "இந்த பொம்மை உனக்கு எப்படி கிடைத்தது? நெக்லஸை இவ்வளவு தத்ரூபமாக எப்படி வரைந்தாய்?" என்று கேட்கிறாள்.

அப்போது அர்ஜுன் ஒரு பெரிய ரகசியத்தை உடைக்கிறான். "இதெல்லாம் நான் செய்யவில்லை... இதற்குப் பின்னால் இருப்பது சாமந்திதான்!" என்று உண்மையை வெளிப்படுத்த, அரசி அதிர்ச்சியில் உறைகிறாள். *அரசியின் அடுத்த முடிவு என்ன? சாமந்தியின் உண்மை வெளிச்சத்துக்கு வருமா? ரோஜாவின் வாழ்க்கையில் என்ன திருப்பம் காத்திருக்கிறது? இப்படியான பரபரப்பான காட்சிகளை காண, இன்று இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் சாமந்தி* சீரியலை தவறாமல் பாருங்கள்!