எல்லோரின் பேவரெட் நாயகி சமந்தாவின் ரகசிய பெயர் என்ன தெரியுமா?
நடிகை சமந்தா
பல்லாவரத்து பெண்ணாக தமிழ் மக்கள் பெருமையாக பார்க்கப்படும் ஒரு பிரபலம் தான் நடிகை சமந்தா.
மாடலிங் துறையில் களமிறங்கி ரூ. 500 சம்பளம் முதன்முதலாக வாங்கியவர் தனது கடின உழைப்பின் மூலம் இப்போது இந்திய சினிமா கொண்டாடும் முக்கிய நாயகியாக வளர்ந்திருக்கிறார்.
தனது சினிமா பயணத்தை டாப்பில் கொண்டு சென்றபோது உடல்நலக் குறைவு ஏற்பட்டு படங்கள் நடிப்பதை குறைத்தார் சமந்தா. அவ்வப்போது படங்கள் நடித்தவர் இப்போது மீண்டும் வேகமாக படங்கள் நடிக்க துவங்கியுள்ளார்.

ரகசிய பெயர்
நடிகை சமந்தா ராஜ் நிடிமோரு என்பவரை மறுமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் சமந்தா நடிப்பில் விரைவில் மா இன்டி பங்காரம் என்ற படம் அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்திற்கான புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் சமந்தா பேசும்போது, எனக்கு வெளியே தெரியாத மற்றொரு பெயர் உண்டு. அதுதான் பொருத்தமென எனக்கு நானே யசோதா என்ற பெயரிட்டுக் கொண்டேன்.
என் கணவருக்கும் அது பிடித்துப்போய் என்னை அப்படித்தான் அழைக்கிறார் என சமந்தா கூறியுள்ளார்.