நம்பர் ஒன் நடிகையாகும் ஆசையில்லை, நடிகை சமந்தாவின் அதிர்ச்சி பதில்
சமந்தா தற்போது மிகவும் பிசியான முன்னணி நடிகைகளில் ஒருவர். இவர் நடிப்பில் விரைவில் காத்துவாக்குல ரெண்டு காதல் வெளியாகவுள்ளது.
இப்படத்தை தொடர்ந்து சகுந்தலம், யசோதா உள்ளிட்ட படங்களும் வெளியாக காத்திருக்கிறது.
இதில் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வரும் யோசோதா படத்திற்காக, ரூ. 3 கோடி செலவு செய்து பிரமாண்ட செட் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடிகை சமந்தா சமீபத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து, கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது நம்பர் ஒன் நடிகையாகும் ஆசை உள்ளதா? என்று ரசிகர்கள் அவரிடத்தில் கேள்வி கேட்டுள்ளார்.
அதற்கு " அப்படியொரு ஆசை இல்லை என்று தெரிவித்துள்ள சமந்தா, நிறைய நல்ல படங்களில் நடித்து நல்ல நடிகையாக வலம் வர வேண்டும் என்ற ஆசை மட்டும் உள்ளது " என்று தெரிவித்துள்ளார்.