சிக்ஸ் பேக் புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா.. கமெண்ட் செய்த முன்னணி நடிகைகள்
நடிகை சமந்தா
இந்தியளவில் பிஸியான நடிகையாக உயர்ந்துள்ளார் சமந்தா. இவர் தற்போது குஷி திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்து வருகிறார்.
ஏற்கனவே இவர் நடிப்பில் உருவாகியுள்ள சாகுந்தலம் திரைப்படம் வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகிறது. மேலும் ஹிந்தியில் வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்து வருகிறார்.
தி பேமிலி மேன் 2 வெப் சீரிஸை இயக்கிய ராஜ் மற்றும் டிகே தான் இந்த வெப் சீரிஸையும் இயக்குகிறார்கள்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவரான சமந்தா மயோசிட்டிஸ் நோயில் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த பின் ஜிம் ஒர்கவுட் செய்யும் புகைப்படங்களை அதிகமாக பதிவு செய்து வருகிறார்.
சிக்ஸ் பேக் புகைப்படம்
அந்த வகையில் இன்று சிக்ஸ் பேக் ஒர்கவுட் செய்யும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவிற்கு பிரபல நடிகைகள் ரகுல் ப்ரீத் சிங் 'சூப்பர் கூல்' என்றும் ஸ்ரேயா ' Strong girl' என்றும் பதிவு செய்துள்ளார்கள்.
சமந்தாவின் இந்த சிக்ஸ் பேக் புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..
அதிர்ச்சியளிக்கும் வகையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகள் திருட்டு.. மதிப்பு மட்டும் இத்தனை லட்சங்களா

என் பையனை வெட்டியது போல்.. அவர் மகளையும்.. அப்போ பாராட்டியிருப்பேன் - கவின் தந்தை ஆவேசம் IBC Tamilnadu
