சூர்யா, சமந்தா இல்ல! இவங்க ரெண்டு பேர் தான் முதல் சாய்ஸ்.. 24 படத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்
சூர்யா - சமந்தா
சூர்யா மற்றும் சமந்தா இருவரும் இணைந்த முதல் முறையாக அஞ்சான் திரைப்படத்தில் நடித்திருந்தனர். இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதை தொடர்ந்து மீண்டும் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த திரைப்படம் தான் 24.
விக்ரம் குமார் இயக்கிய இப்படத்தை சூர்யாவின் 2D Entertainment நிறுவனம் தயாரித்திருந்தது. Sci-Fi கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
முதல் சாய்ஸ்
இந்நிலையில், முதன் முதலில் இப்படத்தில் நடிக்கவிருந்தது நடிகர் சூர்யா கிடையாதாம். இப்படத்தின் கதையை முதலில் நடிகர் விக்ரமிற்கு தான் இயக்குனர் கூறியுள்ளார். ஆனால், அவரால் நடிக்க முடியாமல் போய்விட்டதன் காரணமாக, அதன்பின் சூர்யாவிடம் கதை கூறி ஓகே செய்துள்ளார்.
மேலும் சமந்தா நடித்த கதாநாயகியாக கதாபாத்திரத்தில் முதன் முதலில் இலியானா தான் கமிட் ஆகி இருந்தாராம். ஆனால், திடீரென அவர் வெளியேறிய நிலையில், அவருக்கு பதிலாக சமந்தாவை கமிட் செய்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
