மீண்டும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சமந்தா.. மருத்துவமனை போட்டோ
சமந்தா தான் மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஒரு வருடத்திற்கு முன்பு அறிவித்தார். ஆனால் அதற்காக சிகிச்சை பெற்றுக்கொண்டே அவர் ஒப்புக்கொண்ட படங்களின் பணிகளையும் செய்து முடித்துவிட்டார்.
மோசமான உடல்நிலையில் படுத்த படுக்கையாக இருந்ததை பற்றி பேட்டிகளில் சமந்தா கூறியது ரசிகர்களையும் எமோஷ்னல் ஆக்கியது.
தற்போது சமந்தா சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டு முழுமையாக குணமடைய பல்வேறு விஷயங்களை செய்து வருகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்து விரைவில் முடிவுக்கு வரும் முக்கிய சீரியல்- இந்த தொடரா என ஷாக்கில் ரசிகர்கள்
Immunity சிகிச்சை
இந்நிலையில் தற்போது சமந்தா மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.
வெள்ளை அணுக்கள் உற்பத்தியை அதிகரித்து உடலில் இருக்கும் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த சிகிச்சை எடுத்துக்கொள்வதாக அவர் பதிவிட்டு இருக்கிறார்.