நான் 100% உண்மையாக இருந்தேன்.. விவாகரத்து பற்றி வாய்திறந்த சமந்தா
சமந்தா
நடிகை சமந்தா தற்போது சாகுந்தலம் படத்தின் ப்ரோமோஷனில் பிசியாக இருக்கிறார். அவரது ரசிகர்கள் அந்த படத்தை பார்க்க அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
தற்போது சமந்தா அளித்து வரும் பேட்டிகளில் தனது சொந்த வாழ்க்கை பற்றி பல விஷயங்களை கூறி வருகிறார். நாக சைதன்யாவை பிரிவதாக அறிவித்த பிறகு தனக்கு 'ஊ சொல்றியா' வாய்ப்பு வந்தபோது ஐட்டம் பாடலில் ஆட வேண்டாம் எனகுடும்பத்தினர், நண்பர்கள் பலரும் கூறினார்கள் என சமந்தா கூறி இருக்கிறார்.

நான் திருமணத்தில் உண்மையாக இருந்தேன்
"நான் எதையும் மறைக்க விரும்பவில்லை. நான் எந்த தவறும் செய்யவில்லை. என்னை பற்றி வந்த ட்ரோல்கள் தானாக மறையும் என தவறு செய்தவர் போல காத்திருக்க முடியாது."
"நான் திருமணத்தில் 100 சதவீதத்தை கொடுத்தேன், ஆனாலும் இது நிலைக்கவில்லை. நான் செய்யாத ஒரு தவறுக்காக குற்ற உணர்ச்சியில் எல்லாம் இருக்க விரும்பவில்லை" என சமந்தா கூறி இருக்கிறார்.

விருது விழாவில் அவமானப்படுத்தப்பட்ட நெல்சன்? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்