செம ட்ரெண்டிங் வீடியோவில் சமந்தா ! இணையத்தில் வைரலான அவரின் பதிவு..
பிஸியான தென்னிந்திய கதாநாயகிகளில் ஒருவர் சமந்தா. இவர் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்துள்ளார்.
இதுமட்மின்றி இரண்டு திரில்லர் கதைக்களம் கொண்ட படத்தில் நடித்து வருகிறார். மேலும் தமிழ் மற்றும் தெலுங்கில் சகுந்தலம் எனும் படத்தில் நடிக்கிறார்.
விவாகரத்து பிறகு மீண்டும் திரையுலகில் கவனம் செலுத்தி வரும் சமந்தா விரைவில் ஹாலிவுட்டிற்கும் செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருந்து வரும் சமந்தா அவ்வப்போது புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அதன்படி தற்போது தனது That’s Not My Name ட்ரெண்ட் வீடியோவை சமந்தா பதிவிட்டுள்ளார். அதில் சமந்தா நடித்த முக்கிய கதாபாத்திரங்கள் அனைத்தும் கட்டப்பட்டுள்ளன.