புது வீடு வாங்கும் நடிகை சமந்தா! விலையை கேட்டால் அதிர்ந்துவிடுவீர்கள்..
நடிகை சமந்தா தற்போது கைவசம் பல படங்கள் வைத்து இருக்கிறார். விஜய் சேதுபதி, நயன்தாரா உடன் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் அவர் நடித்து இருக்கிறார்.
சமந்தா
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அடுத்து சகுந்தலம், யசோதா உள்ளிட்ட படங்கள் தயாராகி வருகிறது.
தற்போது அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகள் லிஸ்டில் சமந்தாவுக்கு இரண்டாம் இடம் என சமீபத்தில் தகவல் வெளியானது. அதிலும் அவர் புஷ்பா பட பாடலுக்காக மட்டுமே பல கோடி வாங்கினார் என்கிற செய்தி பலருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்தது.

புது வீடு
இந்நிலையில் சமந்தா புது வீடு வாங்க இருக்கிறார் என இப்போது தகவல் பரவி வருகிறது. மும்பையில் கடற்கரையினை ஒட்டி தான் அவர் வீடு வாங்குகிறார் என சொல்லப்படுகிறது. அதன் விலை மூன்று கோடி ரூபாய்க்கும் அதிகம் என தற்போது தகவல் பரவி வருகிறது.
