90ஸ் ரசிகர்களுக்கு பிடித்த நடிகருடன் ஜோடியாக நடிக்கும் சமந்தா.. யாருடன் தெரியுமா..
நடிகை சமந்தா தற்போது தென்னிந்திய அளவில் மிகவும் பிஸியான நடிகையாகியுள்ளார். இவர் நடிப்பில் தற்போது தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் படம் உருவாகி வருகிறது.
மேலும் இவர் நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வரும் சகுந்தலம் படத்தின் படப்பிடிப்பும் சமீபத்தில் தான் முடிவடைந்து, பின்னணி பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை தொடர்ந்து, இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கும் படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார் நடிகை சமந்தா.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக உள்ள இப்படத்தில் சமந்தா, 90ஸ் ரசிகர்களுக்கு பிடித்த நடிகர் பிரஷாந்துக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
பிரஷாந்த் தற்போது இந்தியில் இருந்து தமிழில் ரீமேக் செய்யப்பட்ட அந்தகன் படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சூரியன் - சந்திரன் ஒரே நாளில் நிகழும் அரிய ராசி மாற்றம்... இந்த ராசிகளுக்கு இனி பொற்காலம் தான்! Manithan