பிரபல பாலிவுட் நடிகருடன் ஜோடி சேரும் நடிகை சமந்தா.. யார் தெரியுமா
பாலிவுட் நடிகருடன் ஜோடி சேரும் நடிகை சமந்தா
தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகையாக வலம் வந்த சமந்தா தற்போது பாலிவுட் பக்கம் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். தி பேமிலி மேன் வெப் சீரிஸுக்கு பின் தற்போது தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடித்து கமிட்டாகியுள்ளார்.
அதில் தற்போது, வருண் தவானுடன் இணைந்து புதிய ஹிந்தி படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். சமீபத்தில் கூட அப்படத்தின் படப்பிடிப்பில் இருந்து சில புகைப்படங்கள் வெளிவந்தது.
இந்நிலையில், தற்போது வருண் தவானை தொடர்ந்து பிரபல பாலிவுட் நடிகர் அயுஷ்மன் குரானாவுடன் ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளாராம் சமந்தா. ஹாரர் காமெடி கதைக்களத்தில் உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு, இந்த வருட இறுதியில் தொடங்க இருக்கிறது.
மேலும் அடுத்த வருடம் படம் வெளியாக இருக்கிறதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமந்தா நடிப்பில் தற்போது சகுந்தலம், யசோதா, ஆகிய படங்கள் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிய நாடொன்றிற்கு எலோன் மஸ்க் விடுத்த கடும் எச்சரிக்கை... 1 மில்லியன் மக்களை இழக்கலாம் News Lankasri
