பாலிவுட் நடிகருக்கு நாகார்ஜூனா குடும்பம் அளித்த விருந்து, கலந்து கொள்ளாத சமந்தா!
தென்னிந்தியளவில் மிகவும் பிரபலமான நட்சத்திர தம்பதிகளான சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் பிரிவு நாளுக்கு நாள் பெரிதாக பேசப்பட்டு வருகிறது.
அதன்படி ஒரு சில சம்பவங்களும் அதனை உறுதிப்படுத்தும் வகையில் நடந்து வருகிறது. ஆம் சமீபத்தில் நாக சைதன்யா நடிப்பில் வெளியான லவ் ஸ்டோரி படத்தின் நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் அமீர் கான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் அவருக்கு ஹைதெராபாத்தில் நாகார்ஜூனாவின் குடும்பம் விருந்தளித்துள்ளது. அதில் நாகார்ஜுனா, அவரது மனைவி அமலா, மகன்கள் நாக சைதன்யா, அகில் மற்றும் லவ் ஸ்டோரி பட இயக்குனர் சேகர் கம்முலா, படத்தின் கதாநாயகி சாய் பல்லவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆனால் அந்த விருந்தில் சமந்தா காணப்படவில்லை, இதனால் தற்போது இந்த விஷயமும் பெரிய செய்தியாக இணையத்தில் பரவி வருகிறது.

கனடாவில் சென்னை தம்பதியர் மற்றும் குழந்தை பலியாக காரணமாக இருந்த விபத்து: சமீபத்திய தகவல் News Lankasri