இந்த நடிகருடன் ரொமான்டிக் படத்தில் நடிக்கவேண்டும் - திருமணமான நடிகை சமந்தாவின் ஆசை
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக திருமணத்திற்கும் பின்னும் வளம் வருகிறார் நடிகை சமந்தா.
இவர் நடிப்பில் தற்போது இந்தியில் உருவாகி உள்ள ‘தி பேமிலி மேன் 2’ என்ற வெப் சீரிஸ் வருகிற ஜூன் 4ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான இத்தொடரின் டிரெய்லர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
சர்ச்சைகள் ஒரு புறம் இருந்தாலும் நடிகை சமந்தா, தற்போது இந்த சீரிஸின் புரமோஷன் வேளைகளில் பிசியாக இருந்து வருகிறார்.
அப்போது நடிகை சமந்தாவிடம், பாலிவுட்டில் எந்த நடிகருடன் ரொமாண்டிக் படத்தில் நடிக்க ஆசை என கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த நடிகை சமந்தா, பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருடன் நடிக்க ஆசைப்படுவதாக கூறினார் நடிகை சமந்தா.

Super Singer: Grand Finale வொர்ட்டிங் அதிரடி மாற்றம்.. முதல் இடத்தை தட்டித்தூக்கிய போட்டியாளர் Manithan
