தமிழில் வாய்ப்பு தேடும் சமந்தா.. இயக்குனர்களுக்கு வைத்த வேண்டுகோள்
நடிகை சமந்தா கடந்த சில வருடங்களாக மயோசிடிஸ் நோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்ததால் படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். தற்போது படிப்படியாக மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியிருக்கும் அவர், 'எங்கள் தங்கம்' என்ற படத்தில் நடித்திருக்கிறார். தெலுங்கில் 'மா இண்டி பங்காரம்' என்ற பெயரில் இந்த படம் வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 19, 2026) ரிலீஸ் ஆகிறது.
தமிழ்நாட்டில் இந்த படத்தை ப்ரொமோஷன் செய்வதற்காக இன்று சென்னையில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்து கொள்ள சமந்தா வந்திருந்தார். அவர் முதலமைச்சர் விஜயையும் சந்தித்து பேசி இருந்த போட்டோக்களும் வைரல் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சி மேடையில் பேசிய சமந்தா தான் தமிழில் தற்போது வாய்ப்பு தேடுவதாக கூறியிருக்கிறார்.

இயக்குனர்களுக்கு வேண்டுகோள்
மேடையில் பேசிய சமந்தா, 'நான் தமிழ் திரைப்படங்களில் தற்போது நடிக்கவில்லை என்கிற வருத்தம் இருக்கிறது. இருப்பினும் அதற்கு இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கிறது, விரைவில் தமிழ் நடிக்க நல்ல கதைகளை தேடி வருகிறேன்" எனவும் கூறியிருக்கிறார்.
"நல்ல கதாபாத்திரங்களை கொடுக்க வேண்டும் என இயக்குனர்களை கேட்டுக்கொள்கிறேன்" எனவும் மேடையிலேயே சமந்தா கோரிக்கை வைத்திருக்கிறார்.
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri