சியான் விக்ரமின் ஐ படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானா.. யார் தெரியுமா
ஐ படம்
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஐ.
இப்படத்தில் மிகவும் கடுமையாக தனது உடலை வருத்திக்கொண்டு நடித்திருந்தார் நடிகர் விக்ரம்.
குறிப்பாக இப்படத்தில் வரும் கதாபாத்திரத்திற்காக சுமார் 30 கிலோ வரை தனது உடல் எடையை குறைத்து நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர் தான் முதலில் நடிக்கவிருந்தது
இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் நடிகை எமி ஜாக்சன். இவருக்கு ஐ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தி தந்தது.
ஆனால், எமி ஜாக்சன் நடித்திருந்த இந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிப்பதாக இருந்தது நடிகை சமந்தா தானாம்.
ஆனால், சில காரணங்களால் இப்படத்தில் சமந்தாவால் நடிக்க முடியாமல் போக, அதன்பின் எமி ஜாக்சன் இப்படத்தில் கமிட்டாகியுள்ளார் என கூறப்படுகிறது.
எஸ்.ஏ. சந்திரசேகர் நடிக்கும் கிழக்கு வாசல் சீரியல்.. நடிகை ராதிகா வெளியிட்ட அறிவிப்பு

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
