மக்களோடு மக்களாக ரூ.300 டிக்கெட்டில் தரிசனம் செய்த சமந்தா! புகைப்படங்களுடன் இதோ..
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை சமந்தா.
இவர் நடிப்பில் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் திரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இரண்டு திரைப்படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார் சமந்தா.
மேலும், அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடமாடியுள்ளார். அந்த பாடலும் சமீபத்தில் வெளியாகி செம ஹிட்டாகியுள்ளது.
இந்நிலையில் நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை சமந்தா சுவாமி தரிசனம் செய்துள்ளார். தரிசனத்திற்கு பின் வெளியே வந்த சமந்தாவை சூழ்ந்த ரசிகர்கள், அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
மேலும் அவர் விஐபி தரிசனத்தில் செல்லாமல் ரூ.300 டிக்கெட்டில் பொதுமக்களுடன் சேர்ந்து சென்று தரிசனம் செய்துள்ளார் என கூறப்படுகிறது.
