காதலர் என கிசுகிசுக்கப்படும் இயக்குநருடன் சமந்தா எங்கு சென்றார் பாருங்க.. வீடியோ இதோ
சமந்தா
நடிகை சமந்தா கடந்த சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருவதை நாம் அறிவோம். இதனால் அவரால் தொடர்ந்து படம் பண்ணமுடியவில்லை.
ஆனால், தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ள சமந்தா மாஸ் கம் பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த சிட்டாடல் வெப் சீரிஸுக்கு சுமாரான வரவேற்பு கிடைத்தது. அதில் இவருடைய ஆக்ஷன் காட்சிகள் பெரிதளவில் பேசப்பட்டது.
காதல் கிசுகிசு
சமந்தாவை வைத்து தி பேமிலி மேன் 2 மற்றும் சிட்டாடல் வெப் சீரிஸ்களை இயக்கியவர்கள் ராஜ் மற்றும் டி.கே. இதில் இயக்குநர் ராஜ் என்பவருடன் நடிகை சமந்தா காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
பிக்கில் பால் விளையாட்டின் போது இருவரும் கைகோர்த்து எடுத்துக்கொண்ட புகைப்படமும், பார்ட்டி ஒன்றில் நெருக்கமாக நின்று எடுத்துக்கொண்ட புகைப்படமும் இணையத்தில் வைரலானது.
இதனால் இருவரும் காதலித்து வருகிறார்கள் என கிசுகிசுக்கப்படும் நிலையில், நடிகை சமந்தா தற்போது இயக்குநர் ராஜ் உடன் திருப்பதி சென்றுள்ளார் அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
சமந்தா சுபம் என்கிற படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். சமந்தா, ராஜ் உடன் சுபம் படக்குழுவினரும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றுள்ளனர்.
இதோ அந்த வீடியோ..
Rumoured lovers alert 🚨 #Samantha and #RajNidimoru spotted together at Tirupati
— TollywoodRulz (@TollywoodRulz) April 19, 2025
📸ArtistryBuzz | #SamanthaRuthPrabhu pic.twitter.com/6dDWwFlEoE