கொரோனாவில் இருந்து மீண்டு வந்த சூர்யா பட நடிகை - சந்தோஷத்தில் ரசிகர்கள்
கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் வாரணம் ஆயிரம்.
இப்படத்தில் கதாநாயகி மேக்னா கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் சமீரா ரெட்டி.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து வேட்டை, அசல், வெடி என அடுத்தடுத்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து படங்களில் நடித்து பிரபலமானார்.
இதன்பின் நடிகை சமீரா இந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். சமீராவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பதை அறிவோம்.
சமீபத்தில் இவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. அதனால் தன்னை தனிப்படுத்திக்கொண்டார் சமீரா.
இதையடுத்து தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்த சமீரா ரெட்டி, தற்போது கொரோனாவில் இருந்து மீண்டு இருப்பதாக கூறி இருக்கிறார்.
இந்த தகவல் ரசிகர்களுக்கு சந்தோஷத்தை அளித்துள்ளது.

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
