குண்டானதால் மோசமான விஷயத்தை சந்தித்த சூர்யா பட நடிகை
சமீரா ரெட்டி
சூர்யாவின் வாரணம் ஆயிரம், அஜித்தின் அசல், மாதவன் நடித்த வேட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருப்பவர் சமீரா ரெட்டி. அவர் ஹிந்தியிலும் பல படங்கள் நடித்து இருக்கிறார்.
2014ல் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன அவர் அதன் பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். தற்போது குடும்பம் மற்றும் குழந்தைகளை மட்டும் கவனித்து வருகிறார் அவர்.
குண்டானதால் சந்தித்த விமர்சனம்
முதல் குழந்தை பிறந்த பிறகு தான் அதிகம் குண்டாக இருந்ததாகவும் அதை பார்த்து பலரும் விமர்சித்தார்கள் என சமீரா ரெட்டி கூறி இருக்கிறார். காய்கறி விற்பவர் கூட மோசமாக பேசி இருக்கிறார்.
நான் வீட்டை விட்டு வெளியில் கூட வரமாட்டேன், பத்ரிகையாளார்கள் போட்டோ எடுக்க விடவே மாட்டேன். அந்த அளவுக்கு இந்த சமூகம் எனக்கு ஒரு மோசமான அனுபவத்தை கொடுத்தது என சமீரா கூறி இருக்கிறார்.
மேலும் தற்போது 44 வயதில் மீண்டும் நடிக்க வருவதற்காக கதைகள் கேட்க தொடங்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் சமீரா ரெட்டி.



Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
