உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய நடிகை சமீரா ரெட்டி - ஷாக்கிங் போட்டோ
சூர்யா நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான வாரணம் ஆயிரம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி.
இதற்கு முன் ஹிந்தியில் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் வாரணம் ஆயிரம் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பெயரை திரையுலகில் வாங்கி தந்தது.
இதன்பின், பல திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை சமீரா ரெட்டி, தீடீரென பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.
மேலும் இந்த தம்பதிக்கு தற்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் திருமணத்திற்கு பின் உடல் எடை கூடி குண்டாக மாறியிருந்த நடிகை சமீரா ரெட்டி, தற்போது 9 கிலோ வரை உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார்.
ரசிகர்கள் பார்த்து ஷாக்கான அந்த புகைப்படம் இதோ..
