ஹாலிவுட் படங்களில் களமிறங்கும் விக்ரம் பட நடிகர்.. யார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் பல துணை கதாப்பாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் சம்பத்ராம். இவர் தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
சமீபத்தில் சம்பத்ராம் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த திரைப்படம் மாளிகப்புரம். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதில் இவர் வெளிப்படுத்திய நடிப்பாற்றல் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தது.
ஹாலிவுட்
இதுகுறித்து பேசிய சம்பத்ராம், நான் மலையாளத்தில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளேன். என்னுடைய 25 வருடம் உழைப்பிற்கு கிடைத்த பலனாக இப்படம் எனக்கு அமைந்தது.
இதையடுத்து நான் விடுதலை, சலார், தங்கலான் மற்றும் மலையாளத்தில் மூன்று படங்கள் நடிக்கிறேன். மேலும் தி கிரேட் எஸ்கேப் மற்றும் தி பேர்ல் பிளட் என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
சம்பத்ராம் கபாலி, விக்ரம், புலி போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
காதலர் தினத்தில் படு கிளாமராக போட்டோ வெளியிட்ட நடிகை ஆண்ட்ரியா- செம வைரல்

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
