ஞானவேல்ராஜா இதோட நிறுத்திக்கங்க... நானும் பேச வேண்டி வரும்: சமுத்திரகனி
பருத்திவீரன் படம் பற்றியும் இயக்குனர் அமீர் பற்றியும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அளித்த ஒரு பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியது. அமீர் ஏமாற்றியதாக அவர் பேட்டி கொடுத்த நிலையில், பருத்திவீரன் படத்தின் பாதியிலேயே விட்டுவிட்டு ஓடியவர் தான் ஞானவேல்ராஜா என அமீர் தரப்பு பதில் கொடுத்து இருந்தது.
இந்நிலையில் இந்த சர்ச்சை பற்றி இயக்குனர் சமுத்திரக்கனி ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பதாவது.
அமீர் அண்ணனை பத்தி நீங்க பேசுன வீடியோவ இப்பதான் பார்த்தேன். ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டு இருக்கீங்க ப்ரோ. தப்பு தப்பா பேசி இருக்கீங்க. கேக்குறதுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. ஏன் சொல்றேன்னா.. அந்த படத்துலா ஆரம்பத்தில் இருந்து கடைசி வரைக்கும் இருந்தவன் நான். எல்லா பிரச்னையும் எனக்கு தெரியும்.
ஆறு மாசம் பருத்திவீரன் படப்பிடிப்பில் இருந்திருக்கேன். ஆனா உங்கள ஒரு நாள் கூட அங்க பாத்தது இல்ல. நான் தான் தயாரிப்பாளர, நான் தான் தயாரிப்பாளர் னு பேசிக்கிட்டே இருக்கீங்க. உங்களை தயாரிப்பாளர் ஆக்கினது, கார்த்தியை ஹீரோ ஆகின்றது அந்த மனுஷன். எந்த நன்றி விஸ்வாசமும் இல்லாம பேசி இருக்கீங்க பிரதர்.
என்னால தயாரிக்க முடியாது.. பாதியில் கைவிரித்த ஞானவேல்ராஜா
கால்வாசி படம் நடக்கும்போதே நீங்க கையை விரிச்சிட்டிங்க. என்னால தயாரிக்க முடியாது.. பணம் இல்ல அப்படினு. சகோதரர் சூர்யா வந்து 'படத்தை நீங்களே வச்சிக்கோங்க அமீர் அண்ணா' அப்படினு சொல்லிட்டு போய்ட்டார்.
அதன் பின் அமீர் அண்ணனோட சொந்தக்காரங்க, நண்பர்கள் இப்படி ஒவ்வொருத்தரிடமும் 1 லட்சம், ஐம்பதாயிரம் என அவர் சொல்ல சொல்ல வாங்கி வந்தவன் நான்.
ஐம்பது, அறுபது பேர் சேர்ந்து காசு கொடுத்து தான் அந்த படத்தை எடுத்து முடிச்சோம். ஆனா கடைசில நீங்க வந்து தயாரிப்பாளர் சட்டையை போட்டுக்கிட்டிங்க. அந்த பதவியை அண்ணன் அமீர் உங்களுக்கு விட்டு கொடுத்தார்.
யார் வேணாலும் என்ன வேணாலும் பேசி இருக்கலாம். ஆனா களத்திலேயே இருந்த கார்த்தி அமைதியா இருக்கிறத தான் என்னால இப்ப வரைக்கும் ஏத்துக்க முடியல.
இந்த மாறி போதுவெளியில தப்பு தப்பா பேசுறத இதோட நிறுத்திக்கோங்க, அது தான் எல்லோருக்கும் நல்லது.
இவ்வாறு சமுத்திரக்கனி கூறி இருக்கிறார்.