சூப்பர் ஸ்டார் படம் என்றால் முதல் காட்சிக்கு போவீங்க.. ஆதங்கத்துடன் பேசிய சமுத்திரக்கனி
சமுத்திரக்கனி
இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக திறமை கொண்டவர் சமுத்திரக்கனி. இவர் நாடோடிகள், அப்பா, வினோதய சித்தம் என பல நல்ல திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
மேலும் பல்வேறு மொழிகளில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் பள்ளி விழா ஒன்றில் சமுத்திரக்கனி நல்ல திரைப்படங்கள் குறித்தும், அதற்கு மக்கள் மத்தியில் எந்த அளவிற்கு ஆதரவு கிடைக்கிறது என்பது குறித்து ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.
ஆதங்கத்துடன் பேசிய சமுத்திரக்கனி
"அப்பா, சாட்டை போன்ற திரைப்படங்கள் எல்லாம் உடனே ரசிகர்களிடம் சென்று சேராது. நீங்கள் எல்லாம் சூப்பர் ஸ்டார் படம் என்றால் முதல் காட்சிக்கு போவீங்க. இந்த மாதிரியான படங்களுக்கு வருவீர்களா? இந்தத் திரைப்படங்கள் எல்லாம் தாமதமாக டிவியில் பார்த்துவிட்டு நல்லா இருக்குன்னு சொல்லிட்டு போயிடுவீங்க.
ஆனால், இது போன்ற படங்களுக்கு உழைப்பு என்பது மிகப்பெரியது. கிட்டத்தட்ட நான் ஏழு வருடங்கள் சேர்த்து வைத்திருந்த காசை வைத்து தான் அப்பா திரைப்படத்தை எடுத்தேன். ஆனால், அந்தத் திரைப்படம் எனக்கு நஷ்டத்தை தான் கொடுத்தது" என கூறியுள்ளார்.

தமிழ் தெரியாத வட மாநிலத்தவர் கேட் கீப்பராக இருந்தது தான் விபத்துக்கு காரணம்.., பெற்றோர் ஆதங்கம் News Lankasri

மரக்கிளைகளில் சிக்கிய சடலங்கள்... கரைகளில் அழுகும் மீன்கள்: டெக்சாஸ் பேரிடரின் கோர முகம் News Lankasri
