விஜய் பதவியேற்பு விழாவில் அந்த மூன்று பேர் மிஸ்ஸிங்.. யாரை சொல்கிறார் சமுத்திரக்கனி?

By Parthiban A May 26, 2026 02:45 PM GMT
Report

நடிகர் விஜய் அரசியலில் நுழைந்து முதல் தேர்தலிலேயே பிரமாண்ட வெற்றியை பெற்று முதலமைச்சராக பதவி ஏற்று இருக்கிறார்.

அதை அரசியல் சுனாமி என கூறி இருக்கிறார் நடிகர் சமுத்திரக்கனி. கொடுத்தவர்களிடம் மக்கள் பணம் வாங்கிக்கொண்டு பிடித்தவர்களுக்கு வாக்களித்து இருக்கிறார்கள்.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய சமுத்திரகனி "விஜய்யிடம் அனுபவம் இல்லை என சொல்கிறார்கள், அனுபவம் இல்லாதவர்கள் தான் பார்த்து பார்த்து அனைத்தையும் செய்வார்கள்."

"அதே நேரத்தில் முக ஸ்டாலின், சீமான் போன்றவர்களின் தோல்வி வருத்தம் அளித்தது. திருமாவளவன், அண்ணாமலை போன்றவர்களும் சட்டமன்றம் சென்றிருக்க வேண்டும்".

விஜய் பதவியேற்பு விழாவில் அந்த மூன்று பேர் மிஸ்ஸிங்.. யாரை சொல்கிறார் சமுத்திரக்கனி? | Samuthirakani Talks About Vijay Family Issue

அந்த மூன்று பேர்..

"விஜய் புதிய முதலமைச்சராக பதவி ஏற்கும் விழாவில் மூன்று பேர் மட்டும் மிஸ்ஸிங். அது எனக்கு வருத்தமாக இருந்தது. உங்களை வீழ்த்த நினைத்தவர்கள் வீடு தேடி சென்று கைகுலுக்கும் பண்பாளர் நீங்கள், அந்த மூன்று பேரை விட்டுவிட மாட்டீர்கள் எங்கிற நம்பிக்கை இன்னும் எனக்கு இருக்கிறது" என சமுத்திரக்கனி பேசி இருக்கிறார்.

விஜய்யின் மனைவி சங்கீதா, மகன் சஞ்சய், மகள் திவ்யா சாஷா ஆகிய மூன்று பேரை தான் மறைமுகமாக சமுத்திரக்கனி குறிப்பிட்டுள்ளார்.  

விஜய் பதவியேற்பு விழாவில் அந்த மூன்று பேர் மிஸ்ஸிங்.. யாரை சொல்கிறார் சமுத்திரக்கனி? | Samuthirakani Talks About Vijay Family Issue

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US