நீங்க தான் பெரிய அம்பானி பேமிலியாச்சே!! ஞானவேல் ராஜாவின் பதிலுக்கு கண்டனம் தெரிவித்த சமுத்திரக்கனி
பருத்திவீரன்
பருத்திவீரன் திரைப்படம் அமீர் மற்றும் கார்த்தியின் கெரியரில் முக்கியமான படமாக அமைந்தது. அதே போல் அந்த படம் தான் அமீர் மற்றும் சூர்யா தரப்புக்கும் இடையே பிரச்சனை உருவாக்கியது.
சமீபத்தில் பேட்டியளித்திருந்த தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, அமீரை குறித்து தரம் தாழ்ந்து பேசினார். இதற்கு அமீர் மட்டுமின்றி சசிகுமார், சமுத்திரகனி, பொன்வண்ணன், கரு.பழனியப்பன், பாரதிராஜா உள்ளிட்ட பலரும் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர்.
இதையடுத்து ஞானவேல் ராஜா தனது வருத்தத்தை சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இருப்பினும் அந்த வருத்தம் போலியான வருத்தம் என்று ஞானவேல் ராஜாவுக்கு எதிராக கருத்துக்கள் எழுந்துள்ளது.
கண்டனம்
இந்நிலையில் இது தொடர்பாக சமுத்திரக்கனி அறிக்கை ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்,
பிரதர்... இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது... நீங்க செய்ய வேண்டியது., எந்த பொதுவெளியில எகத்தாளமா உக்காந்து கிட்டு அருவருப்பான உடல் மொழியால சேற்ற வாரி இறைச்சீங்களோ... அதே பொது வெளியில பகிரங்கமா மன்னிப்பு கேக்கணும்..!
நீங்க கொடுத்த அந்த கேவலமான, தரங்கெட்ட இன்டெர்வியூ-வை சமூக வலைதளங்களில் இருந்து துடைச்சு தூர எறியணும்...! அன்னைக்கு கொடுக்காம ஏமாத்திட்டுப் போன பணத்தை ஒத்த பைசா பாக்கி இல்லாம திருப்பிக் கொடுக்கணும்.
ஏன்னா... கடனா வாங்குன நிறைய பேருக்கு திருப்பிக் கொடுக்க வேண்டியது இருக்கு...
அப்புறம் "பருத்திவீரன்" திரைப்படத்தில வேலை பார்த்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பல பேருக்கு இன்னும் சம்பள பாக்கி இருக்கு. பாவம்...அவங்கெல்லாம் எளிமையான குடும்பத்துல இருந்து வந்து வேல பாத்தவங்க...நீங்கதான், "அம்பானி பேமிலியாச்சே..!"
காலம் கடந்த நீதி..! மறுக்கப்பட்ட நீதி..! என்று பதிவிட்டுள்ளார்.


இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
