படம் தோல்வி.. சம்பளத்தை வாங்க மறுத்த சம்யுக்தா! தயாரிப்பாளர் ஆச்சர்யம்
நடிகை சம்யுக்தா சமீபத்தில் தனுஷ் ஜோடியாக வாத்தி படத்தில் நடித்து பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்திருக்கிறார். அவர் தனது பெயருக்கு பின்னால் இருக்கும் மேனன் என்ற ஜாதி அடையாளத்தை நீக்குவதாகவும் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
வாத்தி படத்தில் அவரது நடிப்புக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து இருக்கும் நிலையில் அடுத்து அவருக்கு மேலும் தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சம்பளம் வாங்க மறுப்பு
சம்யுக்தா இதற்கு முன்பு Edakkad Battalion 06 என்ற மலையாள படத்தில் நடித்தாராம். அதன் தயாரிப்பாளர் சாண்ட்ரா தாமஸ் தற்போது அளித்திருக்கும் பேட்டி வைரல் ஆகி இருக்கிறது.
"Edakkad Battalion படத்திற்காக 65% சம்பளம் மட்டுமே சம்யுக்தாவுக்கு கொடுத்திருந்தேன். ஆனால் படம் வெளியாகி தோல்வி அடைந்தது. இரண்டு நாட்கள் கழித்து சம்யுக்தா ஒரு மெசேஜ் அனுப்பினார். மீத சம்பளத்தை நீங்கள் எனக்கு கொடுக்க வேண்டாம், நீங்கள் கொடுத்தாலும் நான் வாங்கமாட்டேன். அடுத்து ஒரு நல்ல படத்தில் பணியாற்றலாம் என கூறிஇருந்தார்."
"முழு சம்பளத்தை கொடுத்தால் தான் டப்பிங், ப்ரோமோஷனுக்கு வருவேன் என சொல்லும் நடிகர்களுக்கு சம்யுக்தா மேனன் ஒரு சிறந்த textbook போன்றவர்" என சாண்ட்ரா தெரிவித்து உள்ளார்.
வாரிசு படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி இதோ.. இணையத்தில் வைரல்

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
