லோகேஷ் கனகராஜின் படத்தில் கதாநாயகியாகும் தனுஷ் பட நடிகை.. யார் தெரியுமா
பென்ஸ்
லோகேஷ் கனகராஜின் யூனிவெர்சில் (LCU) அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் பென்ஸ். இப்படத்தின் படப்பிடிப்பிற்காக பூஜை சமீபத்தில் நடந்தது.

ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்து வரும் இப்படத்தை, இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்க லோகேஷ் கனகராஜ் தயாரிக்கிறார். மேலும் இளம் சென்சேஷனல் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
சம்யுக்தா மேனன்
ஆனால், இப்படத்தின் ஹீரோயின் குறித்து இதுவரை தகவல் வெளிவரவில்லை. இந்த நிலையில், பென்ஸ் திரைப்படத்தில் மொத்தம் இரண்டு ஹீரோயின்கள் நடிக்கப்போகிறார்கள் என்றும், அதில் ஒருவர் நடிகை சம்யுக்தா மேனன் என்றும் தெரியவந்துள்ளது.

வாத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை சம்யுக்தா மேனன், பென்ஸ் படத்தில் கதாநாயகியாக இணைந்துள்ளது குறித்து விரைவில் அறிவிப்பு வெளிவரும் என கூறப்படுகிறது.
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri